2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இலங்கை மாணவர் படையணியின் பிரதிநிதிகள் குழு நேபாளம் விஜயம்

Kogilavani   / 2013 மார்ச் 05 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


கே.என்.முனாஷா


நேபாள நாட்டில் நடைபெறவுள்ள தேசிய மாணவர் படையணி முகாம் மற்றும் இராணுவ தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை மாணவர் படையணியின் பிரதிநிதிகள் குழு இன்று செவ்வாய்க்கிழமை நேபாளத்திற்கு விஜயம்மேற்கொண்டது.

தெற்காசிய இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின கீழ் இந்த வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினதும் ஆலோசனையின் பேரில் இப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று பயணமாகும் இக்குழுவினருடன் இலங்கை தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் ஜெனரல் காமினி ஜயசுந்தர எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைந்துகொள்ளவுள்ளார்.

இக்குழுவில் யாழப்பாணத்தைச் சேர்ந்த மாணவி திகல்ஜா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X