2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதி மரணம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 01 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.சாஜஹான்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதி மரணம்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று முற்பகல் மரணமடைந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொட் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய விக்டர் எனப்படும் வர்த்தகரே மரணமடைந்;தவராவார். இவர் குளிரூட்டப்பட்ட தனியார் போக்குவரத்து பஸ்கள் சிலவற்றின் உரிமையாளராவார்.

மரணமடைந்த கைதியின் சார்பில் இன்னும் சில தினங்களில் சட்டத்தரணிகள் மூலமாக நீதிமன்றில் பிணை கோரிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட இருப்பதுடன் மஜிஸ்ட்ரேட் விசாரணை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸார் கைதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X