2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தலைநகர் கொழும்பில் தந்தை செல்வா நினைவுப் பேருரை

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரை வழமைபோல இம்முறையும் கொழும்பு பம்பலப்பிட்டி, புதிய கதிரேசன் மண்டபத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினமான எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவரான இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் “இலங்கைத் தமிழர்கள் - செல்வது எங்கே?” என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராஜா தலைமையுரையையும் சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா நன்றியுரையையும் நிகழ்த்துவர்.

பூங்கோதை சந்திரஹாசனின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட “எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் தமிழ் உரிமைகளுக்கான அறவழிப் போராட்டமும்” என்ற ஆவணத்திரைப்படத் தொடரின் முன்னோட்டமும் இந்நிகழ்வில் திரையிடப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X