2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனியின் பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
, வி.ரி.சகாதேவராஜா

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனியினால் நடாத்தப்படும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்று வெள்ளவத்தை ஒருமைப்பாட்டுக்கான மத்திய நிலையத்தில் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் 1325 தீர்மானம், சீடோ பிரமானங்கள் தொடர்பாக  இடம்பெறும் இப்பயிற்சிப்பட்டறையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த துறைசார்ந்த 35 பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனியின் ஸ்தாபகரும், அதன் இணைப்பாளருமாகிய ஜெஸிமா இஸ்மாயிலின் ஒருங்கிணைப்பில் இடம்பெறும் இந்நிகழ்வில் வளவாளர்களாக சமூக ஆய்வாளரும் ஊடகவியலாளருமாகிய அஷ்ஷெய்க் ரவூப் ஸெயின், சிரேஸ்ட சட்டத்தரணி அப்துல் மர்சூக் ஆகியோர்  உட்பட முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முண்ணனியின் உயர் அதிகாரிகள் சிலரும் கலந்துகொள்கின்றனர்.

நேற்று புதன்கிழமை ஆரம்பமான இப்பயிற்சி பட்டரை நாளை வரை இடம்பெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X