2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

விளக்கமறியல் கைதி வைத்தியசாலையில் மரணம்

Menaka Mookandi   / 2013 மே 29 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

பொது இடமொன்றில் புகைப்பிடித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்ற உத்தரவுக்கிணங்க நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 75 வயதுடைய சுனில் ஜயவீர என்ற நபரே மரணமானவராவார். இவர் மாத்தறை, கங்கர பிரதேசத்தைச் சேர்ந்தவாராவார்.

இவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார். பிரேத பரிசோதனை நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .