2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஆடை தொழிற்சாலை யுவதி கொலை வழக்கு ஒத்திவைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்       

ஆடை தொழிற்சாலை யுவதி சமிளா திசாநாயக்காவின் மரணம் தொடர்பான கொலை வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னாள் வைத்திய அதிகாரி சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில், ஆடை தொழிற்சாலை யுவதி சமிளா திசாநாயக்காவின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என்றார்.

ஒருவர் வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே பாய்ந்தால் வைத்தியசாலையின் கட்டிடத்தின் நான்கு அடிகளுக்கு அப்பாலேயே வீழ்ந்திருப்பார்.

ஆயினும் சமிளா திசாநாயக்கவின் உடல் வைத்தியசாலையின் சுவருக்கு அருகாமையில் உள்ள பூ மரங்களையும் சேதப்புடுத்திக் கொண்டு விழுந்துள்ளது.

இதன் காரணமாக இது ஒரு சந்தேகத்துக்கிடமான மரணம் என தெளிவாகத் தெரிகிறது என்றார்.

ஆடைத்தொழிற்சாலை யுவதி கொலைத் தொடர்பில் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்காக வந்த யுவதியை சந்தேக நபரான வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X