
எம்.இஸட்.ஷாஜஹான்
எரிபொருள் மானியம் தொடர்ச்சியாக வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிக்க நீர்கொழும்பு மீனவர்;;கள் தீர்மானத்துள்ளனர்.
நீர்கொழும்பு மீனவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் எரிபொருள் மானியம் வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு கடற்கரைத் தெரு செபஸ்த்தியர் ஆலய மண்டபத்தில் அருட் தந்தை பெட்ரிக் பெர்னாந்து தலைமையில் இடம்பெற்றது.
கடற்கரைத் தெரு மற்றும் குடாப்பாடு ஐக்கிய மீனவர் சுயாதீன அமைப்பு இக்கூட்டத்தினைன ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, 'மானியமாக வழங்கப்படும் எரிபொருளை மீனவர்கள் விற்பனை செய்வதாக அரசாங்கம் மீனவர்கள்மீது குற்றம்சாட்டி அதனை நிறுத்திவிடப் பார்க்கிறது' என மீனவர்கள் தெரிவித்தனர்.
பெரிய ரோலர் படகுகளுக்கு மாதத்திற்கு 35 ஆயிரம் ரூபா பெறுமதியான எரிபொருள் மானியமும் மூன்று தினங்கள் வரை பயணம் செய்யும் பெரிய படகுகளுக்கு மாதத்திற்கு 17 ஆயிரத்த 500 ரூபா எரிபொருள் மானியமும் ஒரு நாள் பயணம் செய்யும் சிறிய படகுகளுக்கு மாதத்திற்கு 9375 ரூபா மானியமும்; வழங்;கப்பட்டதாகவும் இதன்போது மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த மானியம் ஏப்பரல் மாதம் முதல் வழங்;கப்படவில்;லையென மீனவர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.