2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பாலகி துஷ்பிரயோகம்: தாயின் காதலனுக்கு விளக்கமறியல்

Super User   / 2013 ஜூன் 25 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மால் சூரியகொட

ஐந்து மாத குழந்தையை தாயின் காதலன் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று கொழும்பு கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஜுன் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர் தாய்க்கு தெரியாமல் பிள்ளையை தூக்கிச் சென்றுள்ளதாகவும் பின்னர் இந்த ஐந்து மாத பெண் சிசு கோட்டையிலுள்ள செரமிக் சந்தியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டைக்கு அருகே வீதியோரத்தில் வாழ்கின்ற குறித்த சிசுவின் தாய் சில வாரங்களாக ஹொரணையை சேர்ந்த குமரசிரி என்பவருடன் நட்பாக இருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சிசு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X