2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பழக்கம் அதிகரித்துள்ளது: பிரபா எம்.பி

Kanagaraj   / 2013 ஜூன் 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நாடு முழுவதிலும் போதைவஸ்து பழக்கங்கள் பாடசாலை மாணவர் மத்தியிலே மீண்டும் அதிகரித்து வருவது கவலைக்குறிய விடயமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும்  கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன்  தெரிவித்தார்.

மது, புகைப்பாவனை தடுப்பு இயக்கத்தைச் சார்ந்த குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு போதை பொருள் பாவனை மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிபரங்களையும் எவ்வாறான சட்டரீதியற்ற போதைப் பொருட்கள் நாட்டின்  பாவனையிலுள்ளது எனவும் அந்த குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பிரபா கணேசன் எம்.பி யுத்தத்திற்கு பின்பு போதைப் பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலமாக அரசாங்கம் பாரிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சட்ட விரோதமான போதைப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவருபவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

 அதனால் சட்ட ரீதியற்ற போதை பாவனை பாரிய அளவில் குறைந்திருந்தது. ஆனால் இன்று கிடைத்திருக்கும் புள்ளி விபரங்களைப் பார்க்;கும் பொழுது மீண்டும் போதைப் பொருள் பாவனை நாட்டில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தலைநகரில் அதிகமாக காணப்படும் விடயம் சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மாணவர்களின் எதிர்காலத்தையும் குடும்பங்களின் நல்வாழ்வையும் சீர் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கக்கூடாது. தமது சமூகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மேலதிகமாக கசினோ வியாபாரம் மேற்கொள்வதற்கு அனுமதி பத்திரம் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதை வரவேற்கின்றேன். அதே போல் எமது சமூகத்தின் கலை கலாச்சாரத்தை சீரழிக்கும் சட்டரீதியற்ற விடயங்களுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்கக்கூடாது. மேலும் இச்சந்திப்பில் மது புகை பாவனை தடுப்பு இயக்கத்தைச் சார்ந்த கே.பாலகுமார் எஸ்.மதிவதனி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.  இவ் புள்ளி விபரங்கள் பாதுகாப்பு செயலாளரிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X