2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தாக்தலுக்குள்ளான நிலையில் நாடு திரும்பிய பெண்ணை ரஞ்சன் ராமநாயக்க பார்வை

Kogilavani   / 2013 ஜூலை 07 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.ஷாஜஹான்       


சவூதியில் வீட்டு உரிமையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நிர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சென்று பார்வையிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிபெண்ணாக சென்ற பெண்ணொருவர் வீட்டு உரிமையாளர்களால் தாக்கப்பட்ட நிலையில் சவூதியலிருந்து நாடு திரும்பியதுடன் அவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வெலிகம பிரதேசத்தைச சேர்ந்த 40 வயதுடைய சந்ராணி இந்துலதா என்ற பெண்ணே இவ்வாறு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்பெண்ணை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று சனிக்கிழமை சென்று பார்வையிட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

'சவூதி அரேபியாவில் எந்தவித தொழில் சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை என்பதால் எமது நாட்டு பெண்களை அங்கு பணிப் பெண்ணாக அனுப்ப வேண்டாம் என்று அரசாங்கத்திடம் பல தடைவைகள் எடுத்துக் கூறியுள்ளோம்.

ஆயினும், அரசாங்கம் எமது பெண்கள் பணிப்பெண்களாக அங்கு செல்வதை நிறுத்தவில்லை. நாம் ஏன் அவ்வாறு கூறினோம் என்பதை இந்தப் பெண் தாக்கப்பட்டுள்ள சம்பவம் மூலமாக நேரடியாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

எமது நாட்டைவிட பின்தங்கிய பொருளாதார நிலையில் உள்ள நாடுகள் கூட சவூதி அரேபியாவிற்கு பெண்களை அனுப்புவதை நிறுத்தியுள்ளது. எமது ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்வதில்லை' என்றார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X