2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வெலிவேரிய மக்களுக்கு ஆதரவாக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- -எம்.இஸட்.ஷாஜஹான்    

வெலிவேரிய மக்களுக்கு ஆதரவாக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று நடத்தப்பட்டது.நீர்கொழும்பு நகர மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடதத்தபட்டது.

'சுத்தமான தண்ணீருக்கு பதிலாக மரணம்' என்ற தொனிப் பொருளில் சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

வெலிவேரிய ரத்பஸ்வல பிரதேசத்தில் குடி நீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும், அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி  மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின்போது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனுக்காகவும், சம்பவத்தில் காயமடைந்துள்ளவர்களுக்காகவும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனித உரிமைகளை நிலைநிறுத்தமாறு வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து பேரணியாக பிரதான வீதிக்கு வந்தோர் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X