2026 மார்ச் 19, வியாழக்கிழமை

ஆடைத் தொழிற்சாலை யுவதி கொலை வழக்கு: சம்பவ இடத்தை நீதவான் பார்வை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்       


ஆடைத் தொழிற்சாலை யுவதி சமிளா திசாநாயக்காவின் மரணம் சம்பவித்த இடத்தை நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் நேரில் சென்று இன்று பார்வையிட்டார்.

ஆடை தொழிற்சாலை யுவதி சமிளா திசாநாயக்கா, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற பெயரில் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவர்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீர்கொழும்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்ற நிலையில் வழக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்ற இடத்தை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் பார்வையிட வேண்டும் என அரச சட்டத்தரணி கேட்டுகொண்டார்.

இதற்கமைவாக, நீதிமன்ற நடவடிக்கைகள் முற்பகல் 11.45 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், அரச மற்றும் பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட பலர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டனர்.

வைத்தியர் தங்கியிருந்த ஆறாவது மாடியில் உள்ள அறை யுவதி ஆறாவது மாடியிலிருந்து கீNழு தள்ளப்பட்ட இடம், யுவதியின் உடைமைகள் மறைத்து வைக்கப்பட்ட அறை உட்பட வழக்கின் தடயப் பொருட்கள் இருந்த இடங்களை நீதவான் பார்வையிட்டார்.

அதன் பின்னர் வழக்கு விசாரணைகள் பிற்பகல் 1.05 மணியளவில் மீண்டும் ஆரம்பமானது. விசாரணைகளை தொடர்ந்து இவ்வழக்கு எதிர்வரும் நான்காம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .