2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தேங்காய் பறித்தவர் மின்சாரம் தாக்கி மரணம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்  
   

தேங்காய் பறித்துக்கொண்டிருக்கையில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நபர் மரணமடைந்த பரிதாபகரமான சம்பவமொன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நீர்கொழும்பு – பலகத்துறை, கொச்சிக்கடை பிரதேசத்திலேயே இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

தேங்காய் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளியின் கையிலிருந்த கத்தி அதிசக்தி; வாய்ந்த மின்சார கம்பியில் பட்டதனால்  மின்சாரம் தாக்கி மரத்திலிருந்து கீழே விழுந்தே உயிரிழந்துள்ளார்.

கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான செல்டன் என்பவரே  பலியாகியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பலகத்துறை, கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த சுஜித் தபரேரா என்பவருடைய தோட்டத்தில் தேங்காய் பறிக்கையில் தென்னை ஓலையூடாக சென்ற அதிசக்தி; வாய்ந்த மின்சார கம்பி அவருடைய கையிலிருந்த கத்தியில் பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நபர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார். இந்த  இந்த சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X