2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பில் ஜப்பானிய கல்வி கருத்தரங்கு

Super User   / 2013 செப்டெம்பர் 18 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான ஜப்பானிய கல்வி கருத்தரங்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கு எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை நான்கு கொழும்பு கலதாரி ஹோட்டேலில் நடைபெறவுள்ளது.

ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் கற்க விரும்பும் மாணவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜப்பானிய பட்டதாரிகள் சங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் ஆகியவற்றின் உதவியுடன் கொழும்பிலுள்ள ஜப்பானி தூதுவராலயத்தினால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் பங்குபற்ற கட்டணம் எதுவும் அறவிடப்படமாட்டாது. ஜப்பானிலுள்ள ஏழு பிரபல பல்கலைக்கழகங்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X