2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸட்.சாஜஹான்


நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலையம் தளுவகொட்டுவ கிழக்கு கிராம சேவகர் பிரிவுடன் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை தளுவகொட்டுவ பாத்திமாவத்தை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு பிரசார வேலைத்திட்டத்தை மேற்கொண்டது.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகேயின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அருணபிரேம சாந்தவின் வழிகாட்டலில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் டெங்கு ஒழிப்பு பிரசார வேலைத்திட்டத்தை மேற்கொண்டனர்.

இதில் தளுவகொட்டுவ கிழக்கு கிராம சேவகர் மிரெண்டா, பொதுசுகாதார பரிசோதகர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அருணபிரேம சாந்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .