2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

வேலு குமார், சின்னத்தம்பி பாஸ்கரா புதிய பொறுப்புகளுக்கு நியமனம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினரும், உதவி நிர்வாக செயலாளருமான வேலு குமார் மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், ஊடக செயலாளருமான சின்னத்தம்பி பாஸ்கரா ஆகிய இருவரும் புதிய பதவி நிலைகளுக்கு அக் கட்சியின்  தலைவர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நியமனங்கள் அடுத்துவரும் அரசியல்குழு கூட்டத்தில் சம்பிரதாயப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொள்கை பரப்பு செயலாளர்

'ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினரும், உதவி நிர்வாக செயலாளருமான வேலு குமார் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல்மாகாணசபை தேர்தல் பிரசாரம் நடைபெறும் இன்றைய சூழலில் கட்சியின் கொள்கை நோக்கங்களை தெளிவு படுத்தி வேட்பாளர்களை வழிநடத்தும் பணியை செய்திடும் விசேட பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


பரப்புரை  ஒருங்கிணைப்பாளர்

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும், ஊடக செயலாளருமான  சின்னத்தம்பி பாஸ்கரா, கட்சியின் பரப்புரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல்மாகாணசபை தேர்தல் பரப்புரை நடைபெறும் சூழலில் கொழும்பு, கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரப்புரை நடவடிக்கைகளை கட்சி தலைவருடன் இணைந்து முன்னெடுக்கும் விசேட பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X