Thipaan / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
120 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட நீர்கொழும்பு ராஜபக்ஷ பூங்கா வியாழக்கிழமை (29) காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, புனரமைக்கப்பட்ட ராஜபக்ஷ பூங்காவின் நினைவுப்படிகத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி மேயர் எம்.எஸ். ஏம். சகாவுல்லா, மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவின் பின்னர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விசேட தாவரப் பிரிவில் அதிதிகளால் மரங்கள் நடப்பட்டன.
இந்நிகழ்வில் மேயர் அன்ரனி ஜயவீர உரையாற்றுகையில் கூறியதாவது,
கேட் முதலியார் ஏ.எஸ். ராஜபக்ஷவினால் இந்த காணி நீர்கொழும்பு மாநகர சபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டு, 1941ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி சேர் அன்ட்ரூ கோல்கொட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த காணியை அன்பளிப்பு செய்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இதுபோன்ற பரோபகாரிகளை இன்று காண்பது அரிது.
நீர்கொழும்பில் பெரும் பிரச்சினையாக இருந்த இடம் இந்த பூங்காவாகும். இந்த பூங்காவை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. தற்போது அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேல் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சும் நீர்கொழும்பு மாநகர சபையும் இணைந்து பூங்காவை புனரமைப்பு செய்து இன்று மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா இந்த பூங்காவை புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையில் இதனை திறந்து வைப்பதற்கு முடிவு செய்தேன். பெரிய விழாவொன்றை நடத்தாமல் எளிய வைபவம் ஒன்று நடத்தப்பட்டு பூங்கா திறந்து வைக்கப்படுகிறது என்றார்.


2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago