Gavitha / 2015 பெப்ரவரி 18 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு, குடாபாடு பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஓலண்ட் நாட்டவர் ஒருவர் மாரடைப்பினால் மரணமடைந்ததாக, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின் போது தெரியவந்தது.
ஓலண்ட் நாட்டைச் சேர்ந்த ஜோ சென்னஸ் விக்டர் லவ்ஸ் என்ற 72 வயதுடைய வெளிநாட்டவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் தனது மனைவியுடன், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். நீர்கொழும்பு, குடாபாடு பிரதேசத்தில் அமைந்துள்ள பெரடைஸ் ஹோட்டலில் தங்கியிருந்த அந்த வெளிநாட்டவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை திடீரென்று சுகயீனம் ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு மரணமாகியுள்ளார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பினால் ஏற்பட்ட மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டவரின் மரணம் தொடர்பான விசாரணையை நீர்கொழும்பு சுற்றுலாத்துறை பொலிஸாருடன் இணைந்து நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .