2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

ந.தே.மு உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சிறிகொத்தாவில் வியாழக்கிழமை(02) சந்தித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது இலங்கையின் புதிய அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள், கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சிறுபான்மையின மக்களின் காணிகளை மீளக் கையளித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்துவதாகவும் அதற்கான உரிய நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X