2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சமய நல்லிணக்கத்துக்கான சர்வதேச கருத்தரங்கு

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

சமய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை பற்றிய சர்வதேசக் கருத்தரங்கொன்று ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்றது.

இலங்கை சமயக் கல்விகள் திணைக்களம்,  பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் மற்றும் மாணவர் அமைப்பு என்பவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்திரங்கில், இனங்கள், மதங்களிடையே நல்லிணக்கம், சகிப்புத்தன்மை என்பவற்றை வளர்ப்பதற்கான செயல்முறை குறித்து பரிந்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தசாசன, பொதுநிர்வாக மற்றும் ஜனநாயக நல்லாட்சிக்கான அமைச்சர் கரு ஜயசூரிய, அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பாளர் அந்திரோ மன், கௌரவ அதிதிகளாக மல்வத்த பீடத்தைச் சேர்ந்த அதிவணக்கத்திற்குரிய கலாநிதி நியாங்கொட ஸ்ரீ விஜிதஸ்ரீ அனுநாயக்க தேரர், இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சர்வ ரூபானந்தா, நுறானியா அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் எம். ஆகம் நூர் அமித், வணக்கத்திற்குரிய அருட்தந்தை தயா செல்டன் வெல்கடராச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X