2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

2023 ஜூலை வரை தேவையான மருத்துகள் பெற்றுக்கொடுக்கப்படும்...

Freelancer   / 2022 மே 27 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு  ஜூலை இறுதி வரையானது முக்கியமான காலப்பகுதியாகும் என்றும், எனினும் இந்த ஆண்டு ஆகஸ்ட்  முதல் ஜூலை 2023 வரை நாட்டிற்கு  போதுமான மருத்துவப் பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை நேற்று முன்தினம் (25) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து,  இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது,  நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன்,  இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளுக்காக அவருக்கு  நன்றி தெரிவித்தார். 

தற்போதைய சுகாதாரம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவை கலாநிதி. சிங் உறுதிப்படுத்தினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து,  குறிப்பாக இலங்கையிலுள்ள நாட்டிற்கான அலுவலகம் மற்றும்  தற்போதைய சுகாதாரம் சம்பந்தப்பட்ட சவால்களின் நிலையைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு பல வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள வலுவான,  நிலையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்காக இலங்கை அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .