Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீ.எம். முக்தார்
பேருவளை இக்ரா தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியின் 25ஆவது வருட பூர்த்தி விழாவும் 24ஆம் வருட சான்றிதழ் வழங்கும் வைபவமும், ஜாமியா நளீமியா கலாபீட மாநாட்டு மண்டபத்தில், நேற்று பிற்பகல் நடைபெற்றது.
இக்ரா தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சுகாதார, போசாக்கு மற்றும் சதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அத்துடன், அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷீம் கௌரவ அதிதியாகவும் சவுதி அரேபியா, ஜித்தா இக்ரா நிறுவனத்தைச் சேர்ந்த கலாநிதி அவாட் எம். அதுபய்டி மற்றும் தாரிக் காமில் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
ஜாமியா நளீமியா கலாபீட பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முகம்மத் (நளீமி), இக்ரா தொழில் பயிற்சி நிறுவன பணிப்பாளர் வை.ஐ.எம். ரமீஸ் உட்பட பலர் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
சகல முறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய தர்கா நகரைச் சேர்ந்த மாணவன் நஸ்ஹதுல்லா லாபிருக்கு , இக்ரா கலாபீட ஸ்தாபகர் மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியாரின் ஞாபகர்த்த தங்கச் சின்னமும் வழங்கப்பட்டது.
மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் இப்திகார் ஜெமீல், பேருவளை சிறீ லங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். அம்ஜாத், பழைய மாணவர் சங்க தலைவர் அல்ஹாஜ் அஹ்ஸன் ஸவாஹிர், சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், இக்ரா தொழில்நுட்ப பயிற்சி நிறுவன பரிபாலன சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, சீனன்கோட்டை இக்ரா தொழில்நுட்பக் கல்லூரிக்கு 65 இலட்சம் ரூபாய் செலவில் பணிப்பாளர் விடுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பி.யு.டி ஜெம்ஸின் பணிப்பாளரும் மேற்படிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவருமான (2011-2017) அல்ஹாஜ் அஹ்ஸர் ஸவாஹிர், தனது சொந்த நிதியிலிருந்து இக்கட்டடத்தை நிர்மானித்து அன்பளிப்புச் செய்துள்ளார்.
இக்கட்டடத் திறப்பு விழாவும், நேற்று மாலை நடைபெற்றது.



33 minute ago
40 minute ago
49 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
49 minute ago
50 minute ago