2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

4 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் விளக்கமறியல்

Super User   / 2012 மே 11 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

  
               (கே. என்.முனாஷா )

வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி நான்கு கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.எம்.பி. அமரசிங்க இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

தனது மனைவியுடன் சேர்ந்து சீதுவை லியனகே முல்லை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தை நடத்திவரும் பி.ஜே.பி. குமாரசிறி என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

சந்தேக நபரின் மனைவி தற்போது தலைமறைவாகியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் தனது முகவர் நிலையத்தை பதிவு செய்துள்ள சந்தேக நபர், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து 56 பேரிடம் நான்கு கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும்மோசடி செய்த பணத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதுடன், நிதி நிறுனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

சந்தேக நபரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படும் பலர் இன்று நீதிமன்றம் வந்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X