2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’5,000 பேர் தொழிலை இழக்கும் நிலை’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக, பேருவளை- பெந்தோட்டை சுற்றுலா வலயத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றிய 5,000 பேர், எதிர்காலத்தில் தொழில்வாய்ப்புகளை இழக்க நேரிடுமென, பெந்தோட்டை சுற்றுலா ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ரொஹான் கமகே தெரிவித்தார். 

இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது எதர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஹோட்டல்துறை பணியாளர்களின் தொழில் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன், எமது சங்கத்திலுள்ள 8,000 பேருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவும் இதுவரை வழங்கப்படவில்லையென, அவர் தெரிவித்தார்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X