2021 ஜூன் 14, திங்கட்கிழமை

மாவட்டச் செயலாளருக்கே தெரியாமல் காணி சுவீகரிப்பு

George   / 2016 ஜூலை 22 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு தெரியாமல், முல்லைத்தீவில் காணி சுவீகரிப்பு இடம்பெறுவதாக வடமாகாண சபை உறுப்பினர் ஆரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (21) நடைபெற்றபோது, வடக்கில் அத்துமீறி இடம்பெறும் குடியேற்றங்கள் தொடர்பிலான விவாதம், சபையில் நடைபெற்ற போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், 'மகாவலி எல் வலயம் என தமிழர்களின் காணிகளில் சிங்கள குடியேற்றம் செய்யப்படுகின்றது. இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் சேர்ந்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வடக்கில் கலந்துரையாடுகின்றனர். இது இன முரண்பாட்டை ஏற்படுத்தும் விடயம். அந்த வழியில்தான் அவர்கள் கையாள்கின்றனர்.

தமிழர்களுடைய பிரச்சினை இன்னமும் இங்கு தீர்க்கப்படவில்லை. நாங்கள் எங்களுடைய பிரச்சினையுடன், முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றியும் கதைக்கின்றோம். ஆனால், இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை உண்டு பண்ணும்' என்று அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .