2021 ஜூன் 14, திங்கட்கிழமை

யாழில் சகோதரத்துவத்துக்கான துண்டுபிரசுரம் விநியோகம்

Princiya Dixci   / 2016 ஜூலை 23 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'நிரந்தர சகோதரத்துவத்திற்கான காலமிது' என்ற தொனிப்பொருளிலான துண்டுபிரசுரம், சோஷலிச இளைஞர் சங்கத்தினால் இன்று சனிக்கிழமை (23) யாழில் விநியோகிக்கப்பட்டது.

இத்துண்டு பிரசுரத்தை, யாழ். மத்திய பஸ் நிலையத்தில் சோஷலிச இளைஞர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து விநியோகித்துள்ளது.

கடந்த 33 வருடங்களின் முன்பு கறுப்பு யூலை என்ற இனக்கலவரம் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட மாதத்தின் 23ஆம் திகதியை சகோதரத்துவத் தினமாகப் பிரகடனப்படுத்தி இந்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

'தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களாகிய எம்மை ஒன்றாக வாழவிடு' என்ற வாசகம் பொறிக்கபட்ட துண்டுப்பிரசுரத்தினை மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எஸ்.சந்திரசேகர் விநியோகித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .