2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் பெண் காயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது:

 கொட்டடிப் பகுதியிலுள்ள  வீடொன்றைச் சேர்ந்த   சிறார்கள் சிலர் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து மர்மப் பொருள் ஒன்றை எடுத்து வந்து அதனை அடுப்பினுள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் அப்பொருள்  வெடித்ததால் அடுப்புக்கு முன்னால் இருந்து சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் படுகாயங்களுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதே இடத்தைச் சேர்ந்த  ரி.ரட்ணாம்பிகை (வயது 40) என்பவரே காயமடைந்தவராவார். யாழ். போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .