2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

தீவுப்பகுதிக்கான பஸ்சேவை சீரின்மையால் சிரமம்

Super User   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தீவுப்பகுதி மக்களுக்கான மாலைநேர பஸ்சேவை சீரின்மையால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தினமும் மாலை 4.30 மணிக்கும் தொடர்ந்து 6.45 மணிக்குமே இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்சேவை இடம்பெற்று வருகின்றது.

இதனால் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.நகரில் இருந்து குறிகாட்டுவான் மற்றும் ஊர்காவற்றுறைப் பாதை ஊடாக இடம்பெறும் மாலைநேர தனியார் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறாமையால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .