Super User / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
அச்சுவேலி- செல்வச்சந்நிதி வீதியில் பொதுமக்கள் பயணம் செய்வதற்கு மீண்டும் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
எனினும் வீதி மூடப்பட்டது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினரால் உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
கடந்த 30 வருடங்களாக மக்களின் பயன்பாட்டுக்குத் தடை செய்யப்பட்டிருந்த அச்சுவேலி - செல்வச்சந்நிதி வீதி, தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றத்திற்கு முன்னர் பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டிருந்தது.
பகல் வேளையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இவ்வீதியூடாகப் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆயினும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் இந்த வீதியால் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
10 minute ago
26 minute ago
29 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
29 minute ago
49 minute ago