2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

உறவுகளுக்கு உதவும் அமைப்பு 'மண்சுமந்த மேனியர்'

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(கர்ணன்)

சுவிஸ் சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினால் 'மண்சுமந்த மேனியர்' என்னும் தொனிப்பொருளில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் அமைப்பின் அங்குரார்பண நிகழ்வு நேற்று வடமராட்சி திக்கம் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். குடாநாட்டில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 75 மாணவர்களுக்குத் தலா 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது.

அத்துடன் கணவனை இழந்த சுய தொழிலை மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட 10 பெண்களுக்கு சைக்கிள்களும் வழங்கப்பட்டன.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு இவற்றை வழங்கினார்.

altaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .