2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

யாழ். மக்களின் கலாசார, பண்பாட்டின் அடிப்படையில் அபிவிருத்தி - விமல்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ், சங்கவி)

யாழ்ப்பாணத்து மக்களின் கலாசாரம் பண்பாட்டை மையமாகக் கொண்டு இங்கு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய வீடமைப்பு மற்றும் பொது அலுவல்கள் அமைச்சர் விமல்வீரவன்ஸ யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள விமல்வீரவன்ஸ, வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதில் அமைச்சர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்குக் கிழக்கு முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும். தற்போது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் பலமான அரசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான அபிவிருத்திகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த சூழல் காரணமாக யாழ்ப்பாணத்துக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாத நிலையில் முடக்கப்பட்டு இருந்தன.

தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம். வடக்கு கிழக்கு தெற்கு மலையகம் என்று பாரபட்சம் காட்டாது மக்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்  என்றார்.

யுத்தத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டக் கடனுதவியும் வழங்கப்பட்டது. அமைச்சர் தலைமையிலான குழுவினர் யாழ். பொது நூலகம் நாகவிகாரை நல்லூர் ஆயர் இல்லம் ஆகியவற்றுக்கும் விஜயம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .