Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
உரிய வைத்திய நிபுணர்களின் சிபார்சுக் கடிதங்களுடன் வரும் நோயாளிகளுக்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் 'எக்ஸ்ரே' சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள 'எக்ஸ்ரே' இயந்திரங்களில் ஒன்று கடந்த சிலநாட்களாக பழுதடைந்து, இயங்காமலிருப்பதால் நோயாளர்களுக்கான 'எக்ஸ்ரே' சேவை மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவசர நோயாளிகளுக்கு மட்டுமே தற்போது 'எக்ஸ்ரே' படப்பிடிப்பு செய்யப்பட்டுவதால், தென்மராட்சி பகுதியிலிருந்து 'எக்ஸ்ரே' சேவையைப் பெறுவதற்காக செல்வோர் ஏமாற்றத்துடன் திரும்பிவரவேண்டியிருந்தது.
இவ்வாறு தூர இடத்திலிருந்து சென்றும் உரிய சேவையைப்பெற முடியாமல் நோயாளிகள் திரும்பி வருவதால் அவர்களின் நலனை முன்னிட்டே சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களின் சிபார்சுக் கடிதத்துடன் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் 'எக்ஸ்ரே' சேவை வழங்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025