Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ். குடாநாட்டில் இயல்பு நிலை தோன்றிய பின்னர் விவசாயத்துறையில் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இரசாயன உரப்பாவனையால் உடல், உளக் குறைபாடுடைய நீலக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று திருநெல்வேலி விவசாய அபிவிருத்தித் திணைக்களப் பொறுப்பதிகாரி திருமதி செ.விஜயரட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
இரசாயனப் பாவனை என்பது மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். இதனால் மண்வளம் முற்றாகப் பாதிக்கப்படுவதுடன் மக்களின் தேகாரோக்கியமும் கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது.
மிதமிஞ்சிய உரப்பாவனையே இதற்குக் காரணம். உரிய அறிவுறுத்தல்கள் எதுவும் இன்றி தாம் நினைத்தபாட்டிலேயே விவசாயிகள் உரவகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள எண்ணுகிறார்களே தவிர ஏனைய விடயங்கள் தொடர்பாக அவர்கள் எதுவுமே சிந்திப்பது இல்லை. மிதமிஞ்சிய உரப்பாவனையால் உணவுகளில் நஞ்சூட்டம் அதிகரிப்பதுடன் இது இயற்கைச் சமநிலையிலும் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் நீலக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் தோன்றும். எனவே விவசாயிகள் இதனைக் கருத்திற் கொண்டு உரிய அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.- என்றார்.
8 hours ago
22 Oct 2025
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Oct 2025
22 Oct 2025