2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறையில் இருந்து ஆழியவளைக்கு பஸ் சேவை

Super User   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

பருத்தித்துறையில் இருந்து ஆழியவளைக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் 362 இலக்க பஸ்சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதை அடுத்து அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக இந்த பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் இருந்து ஆரம்பமாகும் இந்த பஸ் சேவை கொடிகாமம், பளை, புதுக்காடு, மருதங்கேணி ஊடாக ஆழியவளையைச் சென்றடையும்.

காலை 8.30 மணி, பிற்பகல் 2 மணி ஆகிய நேரங்களில் இரு சேவைகள் இப்பகுதிக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்குக்கான பஸ் பாதை பருத்தித்துறையில் இருந்து அம்பன், நாகர்கோயில் ஊடாகவே முன்னர் இருந்து வந்தது. தற்போது நாகர்கோயில், மருதங்கேணிப் பகுதிகளில் குறித்த பாதையில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டமைக்கான சான்று கிடைக்காமையால் இதற்கான பாதை மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .