2021 ஜூலை 31, சனிக்கிழமை

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம்

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வலிகாமம் வடக்கு ஜே 221, ஜே 222, ஜே 223 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 27ஆம் திகதி மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் என ஈ.பி.டி.பி. செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயச்சியின் பயனாக அதியுயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மேற்படி மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .