Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 28 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கைதடி நவீல்ட் பாடசாலையில் க.பொ.த. சாதாரணதரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் நன்மை கருதி க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கான முற்கூட்டிய நடவடிக்கைகள் அதிபரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் மாணவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியபோதிலும், ஒரு சில மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்திருந்தனர். அத்துடன் மாணவர்களும் தமது அங்கவீனம் காரணமாக கல்வியில் ஆர்வம் காட்டாத நிலைமை இருந்ததுடன், உயர்தர வகுப்புக்களை நடத்த எவரும் முன்வராத நிலைமையும் காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்கான தகுதி பெற்றுள்ளனர். இந்த மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை நடத்த மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய வகுப்புக்கள் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago