2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கொள்ளையர் குழுவால் தாக்கப்பட்ட நபர் மரணம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கோண்டாவில் பகுதியில் கொள்ளையர் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

யாழ். கோண்டாவில் கிழக்கு கோட்டைக்காட்டு ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வீட்டையுடைத்து உள்நுழைந்த கொள்ளையர் குழு மேற்படி நபரை பலமாகத் தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பு, முகத்துவாரத்தைச் சேர்ந்த சபாரத்தினம் ஜேந்திரன் (வயது 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவர்.  இவர் கோண்டாவிலிலுள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோதே இவ்வாறு கொள்ளையர் குழுவால் தாக்கப்பட்டிருந்தார்.
இவரிடமிருந்த பெறுமதியான தங்க ஆபரணங்களையும் கொள்ளையர் குழு சுருட்டிக் கொண்டு தலைமறைவாகியுள்ளது. இவர்களைத் தேடி யாழ். பொலிஸார் வலை வீசியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .