2021 ஜூலை 29, வியாழக்கிழமை

மக்களின் துயர்துடைக்க சர்வமதக்குழு இன்று யாழ். விஜயம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 30 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தேசிய கிறிஸ்தவ திருச்சபையினரின் ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்திற்கான  விஜயமொன்றை மேற்கொள்கிறது.  

இவ்விஜயத்தில் கர்தினால் ரஞ்சித் மல்கம், கொஸ்தாவதம்மலங்கார தேரர், சீவலி தேரர், பிரம்மஸ்ரீ இராமச்சந்திர குருக்கள், பாபுசர்மா, கே.பாலசந்திரசர்மா, மௌலவி ஆதம்பாவா, அன்ட்ரூ சமரதுங்க ஆகிய மதகுருமார்களுடன் 21 பேர் வருகை தரவுள்ளனர்.
இதன்போது, இவர்கள் யாழ். மக்களைச் சந்தித்து அவர்களின் குறைநிறைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, இடம்பெயர் வாழ் முஸ்லிம் மக்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள், மனித உரிமைகள் அமைப்பினர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.  

இதேவேளை, நேற்றையதினம் சர்வமதத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்றிருந்தனர்.
சர்வமத சம்மேளனமும் கரித்தாஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த அப்பகுதி வாழ் மக்களுக்கான கலந்துரையாடல் புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அப்பகுதி வாழ் மக்களின் குறைநிறைகள் வினவப்பட்டதுடன், அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .