Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். பொம்மைவெளிப் பகுதியில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
"எமக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மீண்டும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளோம்" என அம்மக்கள் குறிப்பிட்டனர்.
யாழ். பொம்மைவெளிப் பகுதியில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் தமக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மாதம் 08ஆம் திகதியிலிருந்து சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்களை சென்று பார்வையிட்ட யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந்திரம், அவர்களின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
தமக்கு கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இதுவரையில் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மீண்டும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக முஸ்லிம் மக்கள் தெரிவித்தனர்.
6 minute ago
43 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
43 minute ago
45 minute ago