2021 ஜூன் 24, வியாழக்கிழமை

யுவதியை காணவில்லையென கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதியொருவரைக் காணவில்லையென அவரது தந்தையாரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தனியார் வகுப்புக்காகச் சென்ற நிலையிலேயே குறித்த யுவதி காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிகாமத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை மைத்ரேயி (வயது 18) என்பரே காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .