2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

யாழில் புதிய ஐந்து அணைக்கட்டுக்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசகி)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் யாழ்.மாவட்டத்தில் ஜந்து அணைக்கட்டுகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ்.நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்  திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 80 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந் நிதியின் மூலம் அராலி முதல் பொன்னாலை வரையான அணைக்கட்டு,  வெல்லவை அணைக்கட்டு , காரைநகர் வேணில் அணைக்கட்டு ஆகிய அணைக்கட்டுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கான  வேலைத்திட்டங்கள் இம்மாதம் அல்லது அடுத்த மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்.நீர்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .