2021 மே 13, வியாழக்கிழமை

இளவயதுக் குற்றவாளிகள் யாழில் அதிகம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளின் செயற்பாடுகள் தொடர்பாக பெற்றோர் மிகவும் விளிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் இலங்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ். மாவட்டத்திலேயே இளவயதினர் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது என யாழ். பொலிஸ் நிலைய பொதுசனத் தொடர்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயந்த இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதுடன் குற்றச்செயல்களில் இளவயதினரே இருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம மட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக கிராமிய விழிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

இளவயதினர் மேற்கொள்ளும் குற்றச்செயல்களினால் அச்சமூகமே பாதிக்கப்படுகிறது. இளவயதினர் துடிப்புமிக்கவர்கள். அவர்களை எந்த நேரமும் கண்காணிக்க பெற்றோர்கள் கடமைப்பட்டவர்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொறுத்தவரையில் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும் என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .