Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கபில்)
தமிழர் வீடுலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு, யாழ்ப்பாணம் கல்லூரில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3 மணிக்கு பொதுச்சபைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் மறுநாள் நல்லூர் நடராஜா பரமெஸ்வரி மண்டபத்தில் காலை 10 மணிக்கு தனது தலைமையில் வருடாந்த மாநாடு இடம்பெறுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் வடக்கு கிழக்கில் மாவட்டங்கள் தோறும் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஒருவரை தேர்வு செய்து கௌரவிக்கவுள்ளதாகவும் புதிய நிக்வாகிகள் அறிமுகமும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, அமிர்தலிங்கத்தின் நினைவாக வரலாற்றின் மனிதன் என்ற தலைப்பிலான நூலும் வெளியிடப்படவுள்ளது. இந்நூல் மூலம் பெறப்படும் நிதியானது அமிர்தலிங்கத்தின் சிலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்த ஆனந்தசங்கரி, கட்சிப் பிரமுகர்களின் உரையுடன் தந்தை செல்வா பற்றியதான சிறப்புரையினை கம்பவாரிதி ஜெயராஜ் நிகழ்த்தவுள்ளார் எனவும் தெரிவித்தார்.
6 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago