A.P.Mathan / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இருபாலை வசந்தபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத மூன்று நபர்கள் நடமாடியதை அவதானித்த பொதுமக்கள் அவர்களைப் பிடிப்பதற்காகத் துரத்திச் சென்றபோது, குறித்த சந்தேக நபர்கள் மறைந்திருந்து குடும்பஸ்தரை மடக்கிப்பிடித்து தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாஸ்கரன் கஜந்தன் (வயது 26) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே காயமடைந்துள்ளார். காயமடைந்த குடும்பஸ்தர் கூக்குரலிட்டதை அடுத்து ஒன்றுதிரண்ட பொதுமக்களைக் கண்டதும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 hours ago
02 Dec 2025
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
02 Dec 2025
02 Dec 2025