2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் காபன் துகள்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகத்தில் இயங்குகின்ற மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களிலிருந்து வெளியேறும் காபன் துகள்களை கட்டுப்படுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக யாழ். சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் 1996ஆம் ஆண்டு மீள ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மின் உற்பத்தி இயந்திரங்களிலிருந்து வெளியேறும் காபன் துகள்களினால் சூழல் மாசடைவதாக அப்பகுதி பொதுமக்களினால் முறைப்பாடுகள் தெரிவித்து வந்தனர்.

அத்துடன், தாங்கள் அப்பிரதேசங்களில் வசிக்க முடியாத சூழல் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே காபன் துகள்களை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளினை மின்சார சபை எடுப்பதற்கு தாம் ஏற்பாடு செய்வதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .