Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Administrator / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பொ.சோபிகா
வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிப்படைந்த பாடசாலைகள் இன்னமும் முழுமையான முறையில் சீரமைக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தலைவர் சுந்தரம் பிரதீப் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.
ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடந்த காலங்களில் ஆசிரியர்களின் சம்பள உயர்வு, இடமாற்றம், பதவியுயர்வு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் அனுபவிக்கும் துன்பங்களை அறிந்து அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அதன் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை (05) வெள்ளிக்கிழமை (06) ஆகிய இரு நாட்களும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சேகரித்தோம்.
பாதிப்படைந்த பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்காமல் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து சீரமைக்கின்றது. அவை சீரான முறையில் புனரமைப்பு செய்யப்படாமையால் பாரிய இன்னல்களை ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திக்கவேண்டியுள்ளது.
யத்தத்தினால் பாடசாலைகளில் இருந்த கோவைகள் அழிவடைந்தமையால் அவர்களின் சம்பள உயர்வு, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாதுள்ளது.
நெல் களஞ்சியசாலையில் வட்டக்கச்சி ஆரம்பப்பாடசாலை இயங்கிவருவது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
அத்துடன், ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டவர்கள், தொண்டர் ஆசிரியர்கள் தகுதிகளிலிருந்தும் சேவையில் நிரந்தரமாக்கப்படவில்லை. அவர்கள் நிரந்தர சேவைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
கிளிநொச்சியில் முஸ்லீம் மாணவர்கள் தமது சமயத்தை கற்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர்.
யுத்தத்தினால் பாதிப்படைந்த மாணவர்கள் இன்னமும் இயல்ப நிலைக்கு திரும்பாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மன ரீதியான சிகிச்சை வழங்கி முன்னேற்ற வேண்டியது கல்வி அமைச்சின் கடமை ஆகும்.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சுடன் பேசி தீர்வைப் பெற்றுக்கொடுக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago