2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

வடமராட்சி கிழக்கு பகுதியில் 365 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1,080பேர் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிற்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அப்பகுதிகளுக்குச் சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன், ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் சிறீரங்கேஸ்வரன், வன்னி மக்கள் துயர்துடைப்பு குழுவின் செயலாளர் சதீஸ் ஆகியோர் 551 ஆவது படைகளின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுகத் பெரேராவுடன் கலந்துரையாடியதுடன் மீள்குடியேற்றப் பணிகளையும் நேரில் பார்வையிட்டனர்.

மீள்குடியேற்றத்திற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அங்குள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று தினங்கள் மீள் குடியேற்றப் பணிகள் நடைபெறவுள்ளதுடன் அம்மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .