Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஜூலை 05 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயனில் வரலாற்று மன்னன் அக்கராசனுடைய நினைவேந்தல் நிகழ்வு, இன்று (05) காலை 10 மணியளவில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சு.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் கலந்துகொண்டு, மன்னனின் சிலைக்கு முதலாவது மாலையை அணிவித்தார்.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி, அக்கராயன் சந்தியில் அமைந்துள்ள மன்னன் அக்கராசனுடைய நினைவாக ஆண்டு தோறும் இதே நாளில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.
அக்கராயன் பிரதேசத்தில் சிற்றரசசனாக அக்கராசன் மன்னன் வாழ்ந்ததற்கான தொன்மை சின்னங்கள் தற்போதும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
38 minute ago