2025 மே 21, புதன்கிழமை

’அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை விஸ்தரிக்கப்படும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக, அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை, 100 மில்லியன் ரூபாய் செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தித் துறையையும் இலக்காகக் கொண்ட செயற்றிட்டங்களை உள்வாங்கியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

அத்துடன், அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் முதலீடு செய்து, புதிய தொழிற்றுறைகளை ஆரம்பிக்குமாறு, முதலீட்டளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .