2025 ஜூலை 05, சனிக்கிழமை

அச்சுவேலி வெட்டுகுளம் புனரமைப்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அச்சுவேலி பிரதேச சபையின் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் அச்சுவேலி வெட்டுக்குளம் புனரமைக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக சேறு, குப்பைகள் மண்டிக்கிடந்த இக்குளத்தின் புனரமைப்பு பணிகள், கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன.

இக்குளம் ஆழமாக்கப்பட்டுள்ளதுடன், கரைகளில் அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டு புற்கள் பதிக்கப்பட்டு அழகாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் ஒவ்வொரு கிராமத்துக்கும் கிடைக்கப்பெற்ற 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக்குளத்தின் புனரமைப்புக்கு பிரதேச சபை 5 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியதுடன் பிரதேசமக்களின் பங்களிப்பும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இக்குளம் புனரமைக்கப்பட்டமையால் மழை காலங்களில் தேங்கும் நீரைக்கொண்டு இப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கும் கால்நடைகள் குடிநீரைப் பெறுவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .